தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘’சிக்கன் 65ல் 4 பீஸ்தான் உள்ளது’’ மீதி பீஸ் எங்கே என்று கேட்டு கடைக்காரருக்கு சரமாரி அடி: வியாசர்பாடி ரவுடி கைது

பெரம்பூர்: சிக்கன் பீஸ் பிரச்னையில் கடைக்காரரை சரமாரியாக தாக்கிய ரவுடியை கைது செய்தனர். சென்னை கொடுங்கையூர் ஆதிவாசி காலனி ஓம் சக்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் திவாவின் உசேன் (54). இவர் வியாசர்பாடி கல்லுக்கடை சந்திப்பு பகுதியில் சிக்கன் கடையுடன் சிக்கன் 65 பொறிக்கும் கடை வைத்துள்ளார். இங்கு நேற்றிரவு 3 பேர் குடிபோதையில் வந்து சிக்கன் 65 ஆர்டர் கொடுத்துள்ளனர். இதன்பின்னர் உரிமையாளரிடம் சிக்கன் 65 எவ்வளவு ரூபாய் என்று கேட்டபோது 70 ரூபாய் என தெரிவித்து உள்ளார். அதற்கு 3 பேரும், ‘’எங்களிடம் 50 ரூபாய்தான் உள்ளது. மீதி 20 ரூபாயை பிறகு தருகிறோம். இப்ப சிக்கன் 65 தாருங்கள்’’ என கேட்டுள்ளனர்.
Advertisement

இதையடுத்து உரிமையாளர் உசேன், 4 கறி துண்டுகளை எடுத்து கடாயில் போட்டு வறுத்துள்ளார்.

இதனால் அவர்கள், ‘’சிக்கன் 65 என்றால் ஐந்து பீஸ்தான் வரவேண்டும். நீங்கள் 4 பீஸ்தான் போடுகிறீர்கள்’’ என கூறி கடும் வாக்குவாதம் செய்ததுடன் ஒரு சிக்கன் பீஸை எடுத்து கடாயில் போட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அவர்கள் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அங்கு இருந்த கரண்டியை எடுத்து உசேன் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு 3 பேரும் ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த உசேனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின்படி, வியாசர்பாடி பொறுப்பு இன்ஸ்பெக்டர் கிருபாநிதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில், கடை உரிமையாளர் உசேனை தாக்கியதாக வியாசர்பாடி சி.கல்யாணபுரம் 1வது தெருவை சேர்ந்த வேங்கையன் (23) கைது செய்தனர். இவர் மீது 7 குற்ற வழக்குகள் உள்ளது. வியாசர்பாடி காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு ரவுடியாக உள்ளார். இதன்பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement