தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்களால் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!

 

Advertisement

லண்டன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி, பிரிட்டன் பயணங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளன. தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு உள்ளார். தமிழகத்தில் 15, 320 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ஜெர்மனியை சேர்ந்த 26 நிறுவனங்கள் ரூ.7,000 கோடிக்கு முதலீடு செய்ய முன்வந்துள்ளது. ஜெர்மனியை தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். இங்கிலாந்து நாட்டின், லண்டன் நகரில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அலுவலர்களுடனான தொடர்ச்சியான உயர் மட்ட கூட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, பாதுகாப்பு மற்றும் விண்வெளி, கப்பல் கட்டும் நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஜவுளி தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டார்.

இந்த ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில், தமிழகம் முன்னேறி செல்கிறது, முதலீடுகள் பொழிகின்றன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள X தள பதிவில், லண்டனில் இருந்து மகிழ்ச்சியான செய்தி. இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்ட இந்துஜா குழுமம், தமிழகத்தின் மின்சார வாகன சூழலுக்கான மின்கலம் சேமிப்பு சாதனங்களுக்காக ரூ.7,500 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஆஸ்டிராஜெனீகா நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் இதற்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றால், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கான தமிழக எழுச்சி பயணத்தின் வழியாக, ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன.

இதனால் நம்முடைய இளைஞர்களுக்கு 17,613 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இவை வெறும் எண்கள் அல்ல. அவை வாய்ப்புகள், வருங்காலங்கள் மற்றும் கனவுகள். இது, செயலில் திராவிட மாடலின் மனவுறுதியாகும் என பதிவிட்டுள்ளார். அவருடைய ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கான பயணத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் ஜெர்மனியில் மேற்கொண்ட பயணத்தில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், இங்கிலாந்தில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஜெர்மனியில் ரூ.7,020 கோடியும், இங்கிலாந்தில் ரூ.8,496 கோடியும் என மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News