தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வரும் 18ம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம்: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 18ம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் நடக்கிறது. இதில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. தொடர்ந்து 2 மாதங்கள் நடைபெற்று, ஏப்ரல் 4ம் தேதியுடன் 2025ம் ஆண்டின் முதல் கூட்ட தொடர் நிறைவு பெற்றது.
Advertisement

இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 21ம் தேதி வரை ஒரு மாதம் காலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரு அவைகளிலும் அமர்வுகள் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்பதால் இந்தக் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்ட தொடர் குறித்து விவாதிக்கும் வகையில் திமுக எம்பிக்கள் கூட்டம் வரும் 18ம் தேதி நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ெவளியிட்ட அறிவிப்பு:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை- மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், வரும் 18ம் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதில் திமுக மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதில் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடர் பொருள் குறித்து விவாதிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் வரும் 21ம் தேதி தொடங்க உள்ள மழைக்கால கூட்டத்தொடரில் திமுகவின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும், எந்தெந்த பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்பது தொடர்பாக எம்பிக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைகளை வழங்குவார். மேலும் புதிதாக தேர்வாகியுள்ள மாநிலங்களவை எம்பிக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கி கூறுவார் என்று தெரிகிறது. தமிழ்நாட்டிற்கான நிதிப்பகிர்வில் பாரபட்சம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திமுக சார்பில் குரல் எழுப்பப்படும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு தற்போது உறுப்பினர்களாக உள்ள அன்புமணி ராமதாஸ், மு.சண்முகம், என்.சந்திரசேகரன், மு.முகமது அப்துல்லா, பி.வில்சன், வைகோ ஆகியார் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக சார்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த கமல்ஹாசன், அதிமுகவைச் சேர்ந்த ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர். அவர்கள் வரும் 25ம் தேதி எம்.பி.க்களாக பதவியேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News