இன்று நடைபெற்ற 12480 கிராமசபை கூட்டத்தில் பரிந்துரைக்கப்படும் தீர்மானங்கள் திட்டங்களாக நிறைவேற்றப்படும்: கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை: நாட்டுக்கே வழிகாட்டும் ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் அரசு உருவாக்கியுள்ளது. கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளது என்று கிராமசபை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில், நீங்கள் முன்வைக்கின்ற ஒவ்வொரு பரிந்துரையும் பல்வேறு திட்டங்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.
தமிழகம் முழுவதும் இன்று காலை 12480 கிராம சபை கூட்டங்களில் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: என்றைக்கும் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றக்கூடிய இந்த எண்ணத்தை நமக்குள் விதைத்தவர் அண்ணா. அவர்தான் மக்களிடம் செல், அவர்களிடம் வாழ், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு சேவை செய் என்று நமக்கு கட்டளையிட்டு நம்மையெல்லாம் ஆளாக்கியவர். அண்ணா காட்டிய பாதையில்தான் கலைஞர் சமூகநீதி, சமத்துவம், சமதர்மம் போன்ற உயர்ந்த லட்சியங்களை செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டு திமுக ஆட்சிகளை வழிநடத்தினார். கலைஞர் வழித்தடத்தில்தான் நம்முடைய திராவிட மாடல் அரசும் பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தி சமத்துவம், சமதர்மம், சமூகநீதியை நிலைநாட்டி வருகிறது.
நாட்டுக்கே வழிகாட்டும் ஏராளமான திட்டங்களை நீங்கள் உருவாக்கிய திராவிட மாடல் அரசு உருவாக்கி இருக்கிறது. கிராமப்புற பொருளாதாரத்தையும், பெண்கள் முன்னேற்றத்தையும் சாத்தியப்படுத்தின மாபெரும் திட்டம் மகளிர் சுயஉதவிக்குழு திட்டம். உங்களில் நிறையபேர் சுயஉதவி குழுக்களால் பயன்அடைந்து இருப்பீர்கள். நான் துணை முதல்வராக இருந்தபோது பலமணி நேரம் மேடைகளில் நின்று சுழல்நிதி வழங்கி இருக்கிறேன்.
இதன் அடுத்தக்கட்ட பாய்ச்சலாகத்தான் மகளிர் உரிமைத்தொகை கொடுக்கிறோம். நீங்கள் எல்லாரும் கட்டணம் இல்லாமல் பஸ்சில் போகிறீர்கள். அந்த விடியல் பயண திட்டம் பெண்கள் முன்னேற்றத்தில் எவ்வளவு பெரிய பங்களிப்பை செலுத்துகிறது என்று எண்ணிப் பாருங்கள். நீங்கள் காலையில் சீக்கிரம் வேலைக்கு போக வேண்டும் என்று அவசர அவசரமாக கிளம்புவீர்கள். அதற்கு நடுவில் சமையல் செய்ய வேண்டும்.
அந்த சுமையை குறைக்க அரசு பள்ளியில் படிக்கும் நம்ம குழந்தைகளுக்கு சத்தாகவும், சுவையாகவும் காலை மற்றும் ஆம்னி பஸ்களை நாடி செல்கிறார்கள். சொந்த ஊர் சொல்வதற்காக வருகிற 17 மற்றும் 18ம்தேதிகளில் பொதுமக்கள் பெருமளவில் முன்பதிவு செய்து வருகிறார்கள். இதை அறிந்த ஆம்னி பேருந்து ஆபரேட்டர்கள் தங்களது இணையதளத்தில் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றனர்.
சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ஏ.சி. இருக்கைக்கு ரூ.600 முதல் ரூ.900 ரூபாய் வசூலிக்கப்படும். ஆனால் இப்போது ரூ.2000 முதல் ரூ.3000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஆம்னி பேருந்தில் இந்த கட்டணம் ரூ.3989 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி அல்லாத இருக்கைக்கு ரூ.1400 முதல் ரூ.1800 வரை வசூலிக்கிறார்கள்.
ஏ.சி. படுக்கை வசதிக்கு மதுரைக்கு ரூ.2000 முதல் ரூ.3200 வரை வசூலிக்கிறார்கள். ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.2000 முதல் கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஏ.சி. படுக்கை வசதி கட்டணம் ரூ.3500. ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.2,700 கட்டணம் தற்போது நிர்ணயித்து உள்ளனர். இதே போல நாகர்கோவிலுக்கு குளிர்சாதன வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.2460 கட்டணம் அதிகபட்சமாக வசூலிக்கிறார்கள். ஏ.சி. இருக்கை வசதிக்கு ரூ.3363 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்தக் கட்டணம் தீபாவளி நெருங்கும் நேரத்தில் இன்னும் அதன் தேவையை பொருத்து உயர்த்தி கொள்வார்கள். அதிக கட்டணம் வசூலிப்பதால் நடுத்தர மக்கள் குடும்பமாக பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக இதுபோன்ற கட்டண கொள்ளையில் ஆம்னி பேருந்துகள் ஈடுபடும் போது, தமிழக அரசு தலையிட்டு கடிவாளம் போடுவதற்கான நடவடிக்கை எடுப்பார்கள். இதனால் ஓரளவு கட்டண கொள்ளையை கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது.
ஆனால் இந்த ஆண்டு தனியார் ஆம்னி பேருந்து ஆபரேட்டர்கள் வெளிப்படையாக தங்களது இணையதளத்தில் கூடுதல் கட்டணத்தை அறிவித்து முன்பதிவு செய்கிறார்கள். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கட்டண கொள்ளையில் இருந்து பாவப்பட்ட பயணிகளை காப்பாற்ற முடியும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே உடனடியாக தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளைக்கு முடிவுரை எழுத வேண்டும் என்பது பயணிகளின் வலுவான கோரிக்கையாக உள்ளது.