முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
Advertisement
சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை சீராக உள்ளது. மேலும் முதல்வரின் உடல்நலம் குறித்து இன்று பிற்பகல் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்படவுள்ளது. மு.க.முத்து இறப்பின் போது நாள் முழுவதும் நின்று கொண்டே இருந்தார். தொடர்ச்சியாக ஒன்றரை கிலோ மீட்டர் நடை பயணம் மேற்கொண்டதால் சோர்வடைந்தார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
Advertisement