இந்திய மகளிர் கபடி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு: டாக்காவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 35-28 புள்ளிக்கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி, கபடி உலகக் கோப்பை 2025-ஐ வென்றுள்ள இந்திய மகளிர் கபடி அணிக்கு என் பாராட்டுகள். தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றிருப்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமித தருணம், சரியான ஆதரவும், முன்னேறுவதற்கான சூழலும் அமைந்தால், உலக அரங்கைத் தங்கள் வசமாக்க இயலும் என மீண்டுமொருமுறை இந்தியாவின் மகள்கள் நிரூபித்துள்ளனர். இவ்வாறு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement