முதல்வர் இன்று சேலம் பயணம்
சேலம்: தர்மபுரி திமுக எம்பி ஆ.மணியின் இல்ல திருமண விழா இன்று, தர்மபுரியில் நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு காலை 9.15 மணிக்கு வருகிறார். பின்னர் தர்மபுரிக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். அங்கு திருமண விழாவை முடித்து விட்டு, மதியம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு திரும்பும் அவர், சென்னைக்கு விமானத்தில் செல்கிறார்.
Advertisement
Advertisement