முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: காஞ்சி கலெக்டர் தகவல்
அல்லது மாவட்ட சமூகநல அலுவலகம், பழைய ஊரக முகமை கட்டிடம் முதல் தளம், மாவட்ட கலெக்டர் வளாகம், காஞ்சிபுரம் - 631501 என்ற முகவரியில் நேரில் வந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விண்ணப்பிக்கும் பயனாளிகளின் கருத்துரு தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களுக்கு உண்டான முதிர்வுத்தொகை 18 வயது நிரம்பிய அப்பெண் குழந்தையின் பெயரில், தற்போது செயலில் உள்ள வங்கி கணக்கிற்கு மின் பரிவர்த்தனை மூலம் நேரடியாக செலுத்தப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.
விமானப்படை தேர்வு : இந்திய ராணுவத்தின் அக்னி வீர் வாயு இந்திய விமானப்படை தேர்விற்கு 08.07.2024 முதல் 28.07.2024 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு இணையதளம் வாயிலாக 18.10.2024 முதல் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான வயது வரம்பு 17 முதல் 20 மற்றும் கல்வித்தகுதி 12ம் வகுப்பு அல்லது மூன்று வருட பட்டயபடிப்பு அல்லது தொழில் படிப்புகள் ஆகும். இத்தேர்விற்கான கட்டணம் ரூ.550 GST ஆகும். தகுதியும் விருப்பமும் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள், இத்தேர்விற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.