முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி கைது
சென்னை: முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டார். ஆழ்வார்பேட்டை சித்ரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் வீட்டிற்கு நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். சோதனையில் அது புரளி என தெரிந்தது. போலீசாரின் விசாரணையில், மர்ம போன் செய்தவர் திருப்போரூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஐயப்பன்(36) என தெரியவந்தது. இவர் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சிம்கார்டுகள் விற்பனை செய்து வருகிறார். போதையில் வெடி குண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
உடனே போலீசார் ஐயப்பனை கைது செய்து விசாரணை நடத்திய போது, 2020ல்கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை விமான நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த வழக்கிலும் 2021ல் முதல்வர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த வழக்கிலும் இவர் கைதானவர் என்பது தெரிந்தது. தேனாம்பேட்டை போலீசார் அவரை கடுமையாக எச்சரித்து இனி இதுபோல் வெடி குண்டு மிரட்டல் விடுக்க மாட்டேன் என்று எழுதி வாங்கி கொண்டு விடுவித்தனர்.