முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கவும் ஆணவக் கொலைகளை தடுக்க புதிய சட்டம் இயற்றலாமா என்பது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது . செப்டம்பர் முதல் வாரத்தில் முதல்வர் ஸ்டாலின் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதில் ஆணவக் கொலைக்கு எதிரான சிறப்பு சட்டம் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசின் செயல்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி இருக்கிறது.
தலைமைச் செயலகத்தில் தொடங்கியுள்ள அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் புதிய தொழில் முதலீடு திட்டங்களுக்கு இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் செப்டம்பர் முதல் வாரத்திலேயே முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் ஸ்டாலின், பல்வேறு புதிய முதலீடுகளுக்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளார். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே முதலீடுகள் ஈர்க்கப்பட்டு புதிதாக தொழில் தொடங்க முனையும் நிறுவனங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, புதிய திட்டங்கள், தொழில் விரிவாக்கங்களுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. அதேபோல் தமிழ்நாட்டில் ஆணவக் கொலையை தடுப்பதற்கு தனிச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் உள்ளிட்ட 3 கூட்டணிக் கட்சிகளும் நேரில் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தன.