முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்: துரைமுருகன் அறிவிப்பு
சென்னை: ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்பியுள்ளார். இந்நிலையில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் போது இங்கு கட்சியினர் ஆற்றிய பணிகள், செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படும்.
சென்னையில் நாளைய தினம் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நாளை மதியம் 12 மணியளவில் காணொலி வாயிலாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தலைமைக்கழகம் அறிவுத்தியுள்ளது. இதில் இரண்டு விதமான விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஒன்று திமுக முப்பெரும் விழா. ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்படும்