முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மாற்றுத்திறனாளிகள் சந்திப்பு
Advertisement
சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாற்றுத்திறனாளிகள் அணியின் மாநில தலைவரும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவருமான ரெ.தங்கம், திமுக மாற்றுத்திறனாளிகள் அணியின் செயலாளரும், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவருமான டி.எம்.என்.தீபக், மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்க தலைவர் எஸ்.பூபதி, தேசிய மாற்றுத்திறனாளிகள் இளைஞர் மன்ற தலைவர் முத்துமகேஷ்வரன் நேரில் சந்தித்து பேசினர். அப்போது உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி வாழ்த்து பெற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
Advertisement