தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவள்ளூர் அருகே குளத்தில் மூழ்கி இறந்த 2 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்: ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு

சென்னை: திருவள்ளூர் அருகே குளத்தில் மூழ்கி இறந்த 2 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அயனம்பாக்கம் கிராமத்திலுள்ள கோயில் குளத்தில் மூழ்கி ரியாஸ்(5), ரிஸ்வான் (3) ஆகியோர் உயிரிழந்தனர். குழந்தைகளின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் முதல்வர் தெரிவித்துகொண்டார்.

Advertisement

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் கிராமம், மகாத்மா காந்தி நகர், பொன்னியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் தமீம் அன்சாரி (எ) தமிழரசு மற்றும் அவரது மனைவி வசந்தா ஆகிய இருவரும் நேற்று (01.11.2025 நண்பகல் 12.00 மணியளவில் பணி நிமித்தம் காரணமாக தங்களது இரண்டு குழந்தைகள் ரியாஸ் (வயது 5) மற்றும் ரிஸ்வான் (வயது 3) ஆகிய இருவரையும் வீட்டில் விட்டு வெளியில் சென்ற நிலையில் மேற்படி குழந்தைகள் இருவரும் அருகிலுள்ள பொன்னியம்மன் கோயில் குளத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

Advertisement

Related News