சரிவர பணி மேற்கொள்ளாத தலைமை மருத்துவர் இடமாற்றம்
சென்னை: திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ரூ.5 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்த புதிய மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்தார். அப்போது, புதிய கட்டிடத்தை முறையாக பயன்படுத்தாமலும், பராமரிக்காமலும், நிர்வாக ரீதியாக பணிகள் முறையாக இல்லாததாலும் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் ஜோன் பெலிசிட்டாவை அதிரடியாக இடமாற்றம் செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்பேரில், ஜோன் பெலிசிட்டாவை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து, சுகாதார துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
Advertisement
Advertisement