தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எங்கே யார் தவறு செய்தாலும் தண்டனை தரக்கூடிய தலைவர் தான் எங்கள் முதலமைச்சர் : அமைச்சர் ரகுபதி பேட்டி

Advertisement

புதுக்கோட்டை : அதிமுக - பாஜக கூட்டணியில் நிறைய முரண்பாடுகள் உள்ளன என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ரகுபதி, " ஒரு குடும்பத்தில் துக்கம் நிகழ்ந்தால் வருத்தம் தெரிவிப்பது மனிதாபிமானம். அந்த மனிதாபிமானம் மிக்க முதலமைச்சர் தான் எங்கள் முதலமைச்சர். குருவிகளை போல் சுட்டி தள்ளிவிட்டு எங்களுக்கு தெரியாது என்று கூறும் எடப்பாடி பழனிசாமியை போல் எங்கள் முதலமைச்சர் கிடையாது. எங்கே யார் தவறு செய்தாலும் தன்னுடைய கட்சிகாரர்களே தவறு செய்தாலும் தண்டனை தரக்கூடிய தலைவர் தான் எங்கள் முதலமைச்சர்.

குற்றவாளிகள் இந்த ஆட்சியில் தப்பிக்க கூடாது. தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் இந்த ஆட்சியின் நோக்கம். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் 5 மாதங்களிலேயே தீர்ப்பை பெற்றது தான் அதற்கு உதாரணம். அதிமுக - பாஜக கூட்டணியில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. இபிஎஸ் நான்தான் முதல்வர் வேட்பாளர் என்கிறார்; தலைமை பேசி முடிவு செய்யும் என பாஜக கூறுகிறது. அதிமுக உறுப்பினர் எண்ணிக்கை சரிவதால் பரிதாபத்திற்குரிய இபிஎஸ் திமுகவின் திட்டத்தை விமர்சிக்கிறார். மகளிர் உரிமைத் தொகை தர வேண்டுமென இபிஎஸ் நினைத்திருந்தால் அவர் ஆட்சியில் இருந்தபோதே கொடுத்திருக்கலாம். தேர்தலுக்காக எதை வேண்டுமானாலும் சொல்வார் இபிஎஸ், ஆனால் நாங்கள் சொல்வதை செய்வோம். பாஜகவின் சி டீமான விஜயின் தவெக கட்சி பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை,"இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement