தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலைஞர் கற்று தந்த உழைப்பு என் உதிரத்தில் இருக்கும் வரை நான் என் கடமையை நிறைவேற்றுவேன் :முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை : சென்னை கொளத்தூரில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், "காலையில் இருந்து கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டேன். மாணவர்களின் முகத்தை பார்க்கும்போது உற்சாகம் அடைகிறேன். மாணவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கும்போது எனது கடமையை வேகமாக நிறைவேற்ற வேண்டும் என்ற உத்வேகம் தோன்றுகிறது. எனது உடலில் உயிர் இருக்கும் வரையில் கலைஞர் கற்றுத் தந்திருக்கக் கூடிய உழைப்பு என் உதிரத்தில் இருக்கும் வரை உறுதியாக நான் என் கடமையை நிறைவேற்றுவேன். |நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறேன்.

Advertisement

அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பெற்றுள்ள பயிற்சி சிறிய துவக்கம்தான். இதே பாதையில் வெற்றி பெற தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். வளர்ச்சிக்கேற்றார்போல் மாணவர்கள் அப்கிரேட் ஆக வேண்டும்.ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஏராளமானவை உள்ளன, எது வேண்டுமோ அதை தேர்வு செய்து கற்க வேண்டும். படிப்புதான் கடைசி வரை வாழ்வில் துணைநிற்கும்; உங்கள் எதிர்காலத்துக்கு என்ன தேவையோ அதை நோக்கி நடை போடுங்கள். தமிழ்நாட்டின் நலன் காக்க நான் இருக்கிறேன் என்பதை மறந்து விடாதீர்கள். தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்புக்கு திராவிட மாடல் அரசு இருக்கிறது. தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்பது நமது ஒற்றுமையை காட்டுகிறது,"இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement