உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நவ. 23ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். நவம்பர் 24ஆம் தேதி சூர்யகாந்த் பதவியேற்பார் என சட்டத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நவ.24இல் பதவியேற்கும் சூர்யகாந்த் 2027 பிப். 9ஆம் தேதி வரை தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.
Advertisement
Advertisement