முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி தமிழ்நாட்டில் பெரிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது: உதயநிதி பேச்சு
சென்னை: முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி தமிழ்நாட்டில் பெரிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் துணை முதல்வர் உதயநிதி கூறியதாவது; பயிற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் விளையாட்டில் வெல்ல முடியும். கலைஞரின் லட்சியங்களை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு பரிசுத் தொகையாக ரூ.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement