அரசை நடத்துவது முதலமைச்சர் ஸ்டாலின்தான்; அதிகாரிகள் இல்லை: அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன்!
சென்னை: அரசை நடத்துவது முதலமைச்சர் ஸ்டாலின்தான்; அதிகாரிகள் இல்லை என உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் பதில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அரசை நடத்தவில்லை என நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தெரிவித்த கருத்துக்கு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் டிஜிபி திலகவதிக்கு வீடு ஒதுக்கியதற்கு இரு நீதிபதி அமர்வு தடை விதித்துள்ளதாகவும் பதில் அளித்தார். ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கத்தை நடத்துவது துரதிஷ்டவசமானது என நீதிபதி காலையில் தெரிவித்திருந்தார்.