தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விண்ணப்பித்த 30 நாளில் பட்டா.. முதலமைச்சரின் புதிய ஆணை அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் : ப.சிதம்பரம் நம்பிக்கை

சென்னை: விண்ணப்பித்த 30 நாளில் பட்டா தர வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை வரவேற்கிறேன் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் ஒன்றிய அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், "விண்ணப்பித்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை நான் வரவேற்கிறேன்.
Advertisement

பட்டா கோருவது மட்டுமல்ல, பட்டா மாறுதல், பட்டாவில் பெயரைச் சேர்ப்பது நீக்குவது போன்ற விண்ணப்பங்களும் இருக்கின்றன. மாவட்ட வருவாய் அதிகாரி (DRO), கோட்ட வருவாய் அதிகாரி (RDO), வட்டாட்சியர் (Tahsildar), வருவாய் ஆய்வாளர் (Revenue Inspector) என்று அடுக்கடுக்காக அதிகாரிகள் இருக்கும் போது பட்டா தொடர்பான விண்ணப்பங்களும் குறைகளும் ஏன் மலைபோல் தேங்கிக் குவிந்திருக்கின்றன என்பது புரியாத புதிர்.

இந்த நிலை பல ஆண்டுகளாகப் பல அரசுகளில் நிலவி வரும் அவலம்.கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்ட பொது அறையில் மக்கள் முன்னிலையில் ஒவ்வொரு விண்ணப்பமாக எடுத்து அதிகாரிகள் முடிவெடுத்தால் இந்தப் பணியை 3-6 மாதங்களில் முடிக்க முடியும் என்று கருதுகிறேன்.

ஒரு விண்ணப்பதாரர் மீண்டும் மீண்டும் குறை தீர்க்கும் நாட்களில் படையெடுப்பதைப் பல அதிகாரிகளிடம் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் புதிய ஆணை இந்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன்."இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement