தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிதம்பரம் கோயில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது தவறு இல்லை: ஹெச்.ராஜா

திருவாரூர்: சிதம்பரம் கோயில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது தவறு இல்லை என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள ஒரு திடலில் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளரான இளையராஜா அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த தீட்சிதர்களை தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
Advertisement

இதனை பார்த்த தீட்சிதர்கள், வீடியோவை அழிக்காவிட்டால் செல்போனை உடைத்து விடுவோம் என்று கூறி, இளையராஜாவின் கையை பிடித்து முறுக்கி தாக்கி செல்போனை பிடுங்கி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இளையராஜா சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் தன்னை தாக்கிய தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து விசிக பிரமுகரை தாக்கியதாக 5 தீட்சிதர்கள் மீது நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்களுக்கு பாஜக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். திருவாரூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் கலந்து கொண்டவர் இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; உடற்பயிற்சி எல்லோருக்கும் வேண்டும். சிதம்பரம் கோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை. கருவறையில் விளையாடவில்லை, கோயில் வளாகத்தில் தான் விளையாடினார்கள் என கூறியுள்ளார்.

Advertisement

Related News