தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

செட்டிகுளம் தண்டாயுதபாணி கோயிலில் படிபூஜை விழா கோலாகலம் திரளான பக்தர்கள் தரிசனம் 

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. கோயிலில் ஏறுவதற்கு சுமார் 200 படிகள்  உள்ளன. சித்திரை பிறப்பன்று இந்த படிகளுக்கு படிபூஜை நடைபெறும்.அதேபோல் இந்தாண்டு தமிழ் புத்தாண்டு தினமான இன்று படி பூஜை விழா கோலாகலமாக நடந்தது. படி பூஜை விழாவை முன்னிட்டு மலையின் அடிவாரத்தில் உள்ள படிக்கட்டில் கணபதி பூஜை, கோ பூஜை நடந்தது. பின்னர் பக்தர்கள் மற்றும் திரளான பெண்கள் கையில் செங்கரும்பை ஏந்தி மலையை சுற்றி அரோகரா... என்ற பக்தி கோஷத்துடன் கிரிவலம் வந்தனர்.

பின்னர் திருவிளக்கு பூஜை, படி பூஜை நடந்தது. இதில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், நக்கசேலம், சிறுவயலூர், குரூர், மாவலிங்கை, பெரகம்பி, பொம்மனப்பாடி, சத்திரமனை, வேலூர், ரெங்கநாதபுரம், தம்பிரான்பட்டி, கீழக்கணவாய், செஞ்சேரி, குரும்பலூர், அம்மாபாளையம், சீதேவிமங்கலம், பாடாலூர், திருவிளக்குறிச்சி, இரூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், காரை, தெரணி, ஈச்சங்காடு, மருதடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பெண்கள் கலந்துக் கொண்டு படியில் விளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபாடு நடத்தினர். அதனையடுத்து தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related News