பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து பள்ளத்தில் கார் பாய்ந்து சென்னை தம்பதி பலி: மகள் படுகாயம்
Advertisement
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காரிலிருந்த ராஜ மற்றும் சிறுமியை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் காரின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்ததால் சசிதரன் கால்கள் இரண்டும் இடிபாட்டுக்குள் சிக்கிக்கொண்டது. தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சசிதரன் பரிதாபமாக இறந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலே ராஜயும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதில் அவர்களது மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement