சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு காமகலா காமேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 7.5 கோடி மதிப்பிலான காலி மனை மீட்பு
Advertisement
சென்னை, திருவல்லிக்கேணி, ராஜா அனுமந்த தெருவில் சர்வே எண் 2592-1 ல் அமைந்துள்ள 5305 சதுரடி பரப்பளவு கொண்ட காலி மனையானது. அருள்மிகு காமகலா காமேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமானது என மான்பமை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, சென்னை மண்டலம்-2 இணை ஆணையர் அவர்களின் அறிவுரைகளின்படி, உதவி ஆணையர் கி.பாரதிராஜா முன்னிலையில், காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் ஆகியோரின் உதவியுடன் காலி மனை மீட்கப்பட்டு, திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ. 7.5 கோடியாகும்.
இந்நிகழ்வின்போது மயிலாப்பூர் சரக ஆய்வர் மணி, சிறப்பு பணி செயல் அலுவலர்கள் குமரேசன், தேன்மொழி, ரமேஷ், நித்யானந்தம், கோபி மற்றும் திருக்கோயில் செயல் அலுவலர் கங்காதேவி ஆகியோர் உடனிருந்தனர்.
Advertisement