சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை
சென்னை: சென்னை பெருநகரின் பல் வேறு பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் அதிகாலை வெளுத்து வாங்கிய காண மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கச்செய்தது. பல்லாவரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக கிஸ்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வெள்ளி கிழமை தேறும் கூடும் சந்தை கூட வில்லை மந்தவெளி பகுதியில் மரம் வேரோடு சய்ந்தது விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மரம் வெட்டி அகற்ற பட்டு போக்குவரத்து செரிசெய்யப்பட்டது. பல இடங்களில் வெள்ளம் தேங்கி இருந்தது.
வேளச்சேரியில் பெந்த கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் தங்கியதால் வாகனஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். இதை போல் வடபழனியிலும் சாலைகள் தெருக்களில் வெள்ளம் தேங்கி நின்று மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. பழைய மகாபலிபுரம் சாலையில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தது.
ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மின்சாரம் தாக்கி சாமுவேல் என்பவர் உயிரிழந்தார். எழும்பூர், மடிப்பாக்கம், அழுந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை, அண்ணாநகர், அடையார் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது.