சென்னையில் தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
12:39 PM Aug 09, 2025 IST
சென்னை : சென்னை மாநகராட்சியில் தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் மேயர் பிரியா. நாள் ஒன்றிற்கு தோராயமாக 3000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. ஒட்டுண்ணி நீக்க மருந்தும் செலுத்தப்பட்டு நாய்களுக்கு அடையாள மை வைக்கப்படும்.