2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இன்று முதல் புரோ கபடி லீக் போட்டிகள்
சென்னை: இரண்டு வருடங்களுக்கு பிறகு புரோ கபடி லீக் போட்டிகள் சென்னைக்கு திரும்பி வருகின்றன. இன்று முதல் அக்டோபர் 10 வரை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இந்த போட்டிகள் நடைபெறும். சீசன் 12-ன் மூன்றாவது கட்டமாக அமையும் சென்னை போட்டிகளில் அனைத்து 12 அணிகளும் பங்கேற்கின்றன. இன்று இரண்டு முக்கிய போட்டிகள் நடக்கின்றன.
Advertisement
முதல் போட்டியில் உபி யோத்தாஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சென்னையில் தங்கள் முதல் போட்டியில் நல்ல தொடக்கம் பெற விரும்புகின்றன. இரண்டாம் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தபாங் டெல்லி அணியை எதிர்கொள்கிறது. இம்முறை பல்வேறு அணிகளில் 12 தமிழக வீரர்கள் விளையாடுகின்றனர். இது தமிழக கபடி வீரர்களின் தரம் மற்றும் திறமையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
Advertisement