சென்னையில் 174 சிவப்புநிற விரைவு பேருந்துகள் விடியல் பயணத் திட்டப் பேருந்துகளாக மாற்றம் : தமிழக அரசு தகவல்
Advertisement
இந்த நிலையில், சென்னை மாநகரில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. சென்னையில் நாள்தோறும் மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் உட்பட 3,232 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளாக 1,500 பேருந்துகள் வரை இயக்கம் செய்யப்படுகின்றன. விடியல் பயணத்திட்டப் பேருந்துகளின் பயணியர் எண்ணிக்கையில பெண் பயணியர் எண்ணிக்கை சராசரியாக 63 விழுக்காடாக உள்ளது. பெண் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்,சென்னையில் 174 சிவப்புநிற விரைவு பேருந்துகள் விடியல் பயணத் திட்டப் பேருந்துகளாக மாற்றப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Advertisement