சென்னையில் அடகுக் கடையில் ஓட்டை போட்டு நகை கொள்ளை..!!
11:54 AM May 10, 2024 IST
சென்னை: சென்னை தாம்பரம் அருகே அடகுக் கடையின் பின்பக்க சுவற்றில் ஓட்டை போட்டு 80 கிராம் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கேம்ப் ரோடு சந்திப்பில் மனோஜ் என்பவரின் அடகுக்கடையில் 80 கிராம் தங்கம், 20 கிராம் வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டது. கடையில் ஓட்டை போட்டு நகைகளை கொள்ளையடித்த கும்பல் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.