சென்னையில் சட்டக்கல்லூரி அமைக்க இடம் தேர்வு தொடர்பாக வருவாய்த்துறைக்கு கடிதம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
Advertisement
அப்போது, சென்னையில் சட்டக்கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்வது தொடர்பாக வருவாய் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சட்டக்கல்லூரி அமைக்க குறைந்தபட்சம் 7 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டக்கல்லூரி கட்டிடத்தை பயன்படுத்தலாம் என தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதிகள், மீண்டும் மோதல் நடப்பதை விரும்பவில்லை. சென்னை நகருக்குள் சட்டக்கல்லூரி அமைப்பதற்கான நிலத்தை கண்டறிந்து தெரிவிப்பதற்காக ஜூன் 24ம் தேதி வரை அரசுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
Advertisement