சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
சென்னை: சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. 40க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் போத்தீஸ் ஜவுளி நிறுவன இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அபிராமபுரத்தில் போத்தீஸ் நிறுவன உரிமையாளர் ரமேஷ் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நீலாங்கரையில் உள்ள போத்தீஸ் நிறுவன உரிமையாளர் மகன்கள் அசோக், போத்ராஜா வீடுகளில் சோதனை நடைபெறுகிறது.
குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ண மஹால் நகை மற்றும் துணிக்கடையில் சோதனை நடைபெற்று வருகிறது. 3 கார்களில் வந்த 12 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பக்கவாட்டு வழியாக உள்ளே சென்று சோதனை செய்து வருகின்றனர். வழக்கமாக போலீஸ் அல்லது துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் வருமான வரி சோதனை நடத்தப்படும். வழக்கத்துக்கு மாறாக தற்போது எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் ஐ.டி. சோதனை நடைபெற்று வருகிறது.