சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை: சென்னை தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மெட்ராஸ் நகரம் 1639-ம் ஆண்டு ஆக.22-ம் தேதி உருவானது. இது சிங்கார சென்னையாக வளர்ந்து இன்றுபிரம்மாண்ட பரிமாணத்தில் பல பகுதிகளை சார்ந்த மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டி, எல்லோருடைய மனதிலும் ஒரு உணர்வுபூர்வமான இடத்தைபிடித்திருக்கிறது. சென்னை உருவான ஆக.22-ம்தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. சென்னை தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்; எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386. சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு. வணக்கம் வாழவைக்கும் சென்னை என்று குறிப்பிட்டுள்ளார்.