சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96,480க்கு விற்பனை..!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தங்கம் என்பது வெறும் நகை அல்ல, அது பாரம்பரிய முதலீடு மற்றும் சமூக அந்தஸ்தின் அடையாளம். திருமணங்கள், பிறந்தநாள்கள் போன்ற சந்தர்ப்பங்களில் தங்க நகை வாங்குவது வழக்கம். ஆனால் இந்த விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிச.01) ஆபரண தங்கம் கிராம், 12,070 ரூபாய்க்கும், சவரன், 96,560 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 196 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (டிச.02) தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் குறைந்து, 12,040 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் குறைந்து, 96,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று (டிச.03)ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் 12,060க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.201-க்கு, ஒருகிலோ ரூ.2,01,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை நிலவரம்;
* 03.12.2025 ஒரு சவரன் ரூ.96,480 (இன்று)
* 02.12.2025 ஒரு சவரன் ரூ.96,320 (நேற்று)
* 01.12.2025 ஒரு சவரன் ரூ.96,560