தொடர்ந்து 3வது நாளாக விலையில் மாற்றமில்லை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.63,520க்கு விற்பனை!!
ஒரு கிராம் தங்கம் ரூ.20-ம், ஒரு பவுன் தங்கம் ரூ.160-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 940-க்கும், ஒரு பவுன் ரூ.63 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. அதேபோல கடந்த வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.50 குறைந்தது. வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.40-ம், புதன்கிழமை 25-ம் குறைந்தது. தொடர்ந்து 4 நாட்களாக குறைந்த நிலையில், இன்றும் விலை குறையுமா என இல்லத்தரசிகள் எதிர்பார்த்தனர். ஆனால், தங்கம் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 7,940-க்கும் பவுனுக்கு ரூ. 63,520- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் , கிராம் ரூ.8,662 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிரமுக்கு ஒரு ரூபாய் கூடியுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.106 ஆக விற்பனை செய்யப்படுகிறது.