சென்னையில் தற்காலிக கொடிக்கம்பங்கள் நட அனுமதி அவசியம்
Advertisement
சென்னை: சென்னையில் தற்காலிக கொடிக்கம்பங்கள் நட அனுமதி பெறுவது கட்டாயம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. பொதுக்கூட்டம், தேர்தல் பரப்புரை, தர்ணாவுக்காக தற்காலிக கொடிக்கம்பம் நட முன்அனுமதி பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல் நடப்படும் தற்காலிக கொடிக்கம்பங்கள் அகற்றப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Advertisement