சென்னை உர நிறுவன முன்னாள் அதிகாரிகள் விடுதலை
சென்னை: டெண்டர் ஒதுக்கீடு செய்ய 26 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் சென்னை உர நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், பொது மேலாளர் உள்பட 4 பேரை விடுதலை செய்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 26 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
Advertisement
Advertisement