சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 12 விமானங்கள் முன்னறிவிப்பு இன்றி ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி
10:28 AM Jul 01, 2024 IST
Share
சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 12 விமானங்கள் முன்னறிவிப்பு இன்றி ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். டெல்லி, ஷீரடி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள் முன்னறிவிப்பு இல்லாமல் ரத்து செய்யப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது.