சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 3 மணிநேரம் தாமதம்: பயணிகள் கடும் அவதி
சென்னை: சென்னையில் இருந்து நேற்று காலை 6 மணியளவில் டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், சுமார் 2 மணிநேரம் தாமதமாக காலை 8.05 மணியளவிலும், காலை 8 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் 3 மணிநேரம் தாமதமாக காலை 11 மணிக்கும், காலை 11 மணியளவில் டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் 3 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 2 மணிக்கும் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 3 ஏர் இந்தியா விமானங்கள் மூன்று மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டதால் டெல்லி செல்ல இருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். நிர்வாக காரணம், மோசமான வானிலை தாமதத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement