தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை மாநகராட்சியில் தொடர் புகார்களுக்கு உள்ளான 4 கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ் : நகராட்சி நிர்வாகத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சியில் தொடர் புகார்களுக்கு உள்ளான 4 கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நகராட்சி நிர்வாகத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், கால்வாய் பணிகள், மின் கேபிள் பதிப்பு போன்ற திட்டப் பணிகளும், குடிநீர் - கழிவுநீர் திட்ட பணிகள் என பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இது போன்ற பணிகளை சரியாக மேற்பார்வையிடாதது, மக்கள் புகார்களை அலட்சியப்படுத்துவது, ஒப்பந்ததாரர்களிடம் பணம் கேட்டு மிரட்டியது, அதிகாரிகளை தரக்குறைவாக பேசுவது ஆகிய பல்வேறு புகார்கள் கவுன்சிலர்கள் மீது குவிந்த வண்ணம் உள்ளன.
Advertisement

இது போன்ற புகார்கள் மீது சிறப்பு நுண்ணறிவு போலீசார் மூலம் புகார் தொடர்பாக உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் முதற்கட்டமாக சென்னையில் உள்ள 4 கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மாதவரம், அம்பத்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ரமா மண்டலங்களில் உள்ள 4 கவுன்சிலர்களுக்கு உள்ளாட்சி அமைப்பு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திமுக கவுன்சிலர்கள் தி.கார்த்திகேயன், வ.பாபு, க.ஏகாம்பரம், அதிமுக கவுன்சிலர் டி.சி.கோவிந்தசாமி ஆகிய 4 பேருக்கு நகராட்சி நிர்வாகத்துறை நோட்டீஸ் அனுப்பி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. புகார்களின் அடிப்படையில் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என 4 கவுன்சிலர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. புகார்கள் உறுதி செய்யப்பட்டால், உரிய சட்ட நடவடிக்கை அல்லது புகாருக்குள்ளான 4 கவுன்சிலர்கள் தகுதி நீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

Advertisement

Related News