சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் கைது
04:22 AM Aug 14, 2025 IST
சென்னை: சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் 13வது நாளாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் தூய்மைப் பணியாளர்களை காவல்துறை கைது செய்தது. பணி நிரந்தரம், தூய்மைப் பணியை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து காவல்துறை கைது செய்தது.