சென்னையில் 3 நாள் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி: அரசு தகவல்
இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர், குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032. 8668108141 / 8668102600 என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.