தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை

சென்ன: சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலையே சென்னை அண்ணா பல்கலைக்கழக கனிணிமையத்திற்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மிரட்டல் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோட்டூர்புரம் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் வைத்து சோதனை செய்ததில் புரளி என தெரிய வந்ததை அடுத்து மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இன்று காலையும் வெடிகுண்டு மிரட்டல் குறித்து குறுஞ்செய்தி வந்துள்ளது. காவல்துறையினர் முன்னெச்சரிக்கை காரணமாக நான்சி என்ற மோப்ப நாய்களுடன் மீண்டும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சென்னை ரயில் நிலையத்திலும் ,விமான நிலையங்களிலும், குறிப்பாக சில பல்கலைக்கழகங்களிலும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் இமெயில் மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும் வருவதால் காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டது.

இந்த விசாரணையில் மூலம் மோப்ப நாய்கள் மூலமாக சோதனை செய்ததில் அவை பெரும்பாலும் புரளி என கண்டறியப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக சில தினங்களுக்கு முன்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் 100 எனும் காவல்துறை கட்டுப்பாட்டை அறைக்கு அழைப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணை செய்ததில் மன நல சீர் வேண்டும் சிறுவன் தனது தந்தையின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியது கண்டறியப்பட்டது. இதன் பின்னர் போலீசார் எச்சரிக்கை கொடுத்து அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.