சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 12 விமானங்களின் சேவை திடீரென ரத்து!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 12 விமானங்களின் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகள் மாற்று விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், புனே, காசியாபாத் செல்லக்கூடிய விமானங்களும், கொல்கத்தா, புனே, மும்பை, அகமதாபாத்தில் இருந்து சென்னை வரக்கூடிய 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து முன்பதிவு செய்த பயணிகளை மாற்று விமானங்களில் அனுப்பி வைக்கப்படுவதாக விமான நிலைய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதற்கு அனைத்து பயணிகளும் ஒப்புக்கொள்ளவில்லை எனவும், சில பயணிகள் முன்பதிவை ரத்து செய்துவிட்டு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், உரிய நேரத்தில் தாங்கள் செல்லக்கூடிய இடத்திற்கு போக முடியாததால் அவதிக்குள்ளாகினர்.