தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை ஏர்போர்ட்டில் சுகாதாரமின்றி துர்நாற்றம்: ப.சிதம்பரம் கண்டனம்

சென்னை: காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரம் எம்பி, டெல்லியில் இருந்து நேற்று காலை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் புறப்பட்டு காலை 8.40 மணிக்கு சென்னை உள்நாட்டு முனையம் வந்தார். பின்னர், டெர்மினல் 4 வழியாக, வெளியில் வந்து, காரில் ஏற முயன்றபோது, டெர்மினல் 4 பகுதிகளில் சுகாதார கேடுகளால் துர்நாற்றம் வீசியுள்ளது. இதை பார்த்த ப.சிதம்பரம், தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

அதில், சென்னை சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 4, சுகாதார சீர்கேடுகளுடன், துர்நாற்றம் வீசிக்கொண்டு இருக்கிறது. சென்னை விமான நிலைய மேலாளர்கள், இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள், மற்றும் விமான நிலைய ஊழியர்கள் கவனத்திற்கு வரவில்லையா, இந்த துர்நாற்றத்தை அவர்கள் எப்படி சகித்துக் கொண்டு, அங்கு இருக்கின்றனர், என்று கண்டித்துள்ளார்.

இதற்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள் அளித்துள்ள பதிலில், உங்களுக்கு ஏற்பட்டுள்ள அசவுகரியத்திற்காக வருந்துகிறோம். விமான நிலையத்தில் குப்பையை, பயணிகளுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்பதற்காக, பயணிகள் நடமாட்டம் அதிகமாக இல்லாத நேரம் பார்த்து, சுத்தப்படுத்தி எடுத்து செல்ல, ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

நேற்று காலை அதைப் போல் குப்பையை ஏற்றிக் கொண்டு குப்பை வண்டி சென்ற, அடுத்த 10 நிமிடங்களில் நீங்கள் அந்தப் பகுதிக்கு வந்திருக்கிறீர்கள். அதனால்தான் உங்களுக்கு, துர்நாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. விமான நிலைய டூட்டி மேனேஜர்கள், விமான நிலையத்தின் சுத்தம் சுகாதாரத்தை, 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர், என பதிலளித்துள்ளனர்.

Advertisement

Related News