சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 27 விமானங்கள் தாமதம்: பயணிகள் பாதிப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 27 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர். சென்னைக்கு வரும் 12 விமானங்கள் சென்னையில் இருந்து புறப்படும் 15 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய கோலாலம்பூர், இலங்கை, துபாய், குவைத் உள்ளிட்ட 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னையில் நள்ளிரவில் பெய்த கனமழையால் சென்னைக்கு வந்த 4 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன.
Advertisement
Advertisement