சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை - பொது சுகாதாரத்துறை விளக்கம்
சென்னை : சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை என்று பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவது சாதாரண Influenza A காய்ச்சல் மட்டுமே என்றும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. மேலும்,"காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50% நோயாளிகளுக்கு Influenza A வகை பாதிப்பு மட்டுமே உள்ளது; ஆண்டின் இறுதி 3 மாதங்களில் டெங்கு பாதிப்பு 2 மடங்காக அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான்; வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement