சென்னை வேப்பேரியில் ஆட்டோவில் பெண் தவறவிட்ட ரூ.1.5 லட்சத்தை ஒரு மணி நேரத்தில் மீட்டது காவல்துறை..!!
சென்னை: சென்னை வேப்பேரியில் ஆட்டோவில் பெண் ஒருவர் தவறவிட்ட ரூ.1.5 லட்சத்தை ஒரு மணி நேரத்தில் காவல்துறை மீட்டுள்ளது. சென்னையில் இன்று காலை ஆட்டோவில் ரூ.1.5 லட்சம் பணத்தை தவறவிட்ட பெண் ஒருவர் பெரியார் திடல் அருகில் அழுதுகொண்டிருந்தார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவ்வழியே காரில் சென்ற போது பெண் அழுவதை கண்டு காரை நிறுத்தி அவரிடம் விவரம் கேட்டு அவருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தனது ரூ.1.5 லட்சம் பணத்தை துளைத்துவிட்டதாக கூறியதை அடுத்து உடனடியாக திருமாவளவன் அந்த பெண்ணை அழைத்து கொண்டு காவல் ஆணையரிடம் பேசி பணத்தை மீட்டு தருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். உடனடியாக தன் கட்சி தொண்டர்களையும் உடன் அனுப்பி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்து. பணத்தை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கூறிவிட்டு சென்றார்.
இதை அடுத்து வேப்பேரி காவல்நிலையத்தில் அப்பெண் புகார் அளித்ததை அடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.அவர் ஆட்டோவில் சென்றது தெரியவந்தது. அந்த ஆட்டோவில் தனதுபணத்தை வைத்ததாக கூறியதை அடுத்து. அந்த ஆட்டோ நம்பரை வைத்து செல்போன் எண்ணையும் போலீசார் கண்டுபிடித்தனர். செல்போன் எண்ணை வைத்து உடனடியாக ஆட்டோ டிரைவர்க்கு தொடர்பு கொண்டு அந்த ஆட்டோவில் பணம் இருக்கிறதா என்பதை சோதனை செய்ய ஆட்டோ டிரைவருக்கு செல்போன் மூலமாக கேட்டார்கள்.
பணம் இருந்ததை ஆட்டோ டிரைவர் உறுதி அளித்ததை அடுத்து உடனடியாக காவல் நிலையத்தில் தரவேண்டும் என்று கூறினர். ஆட்டோ டிரைவரும் அந்த பணத்தை கொடுத்தார். 1மணி நேரத்தில் அந்தபணம் அப்பெண்னிடம் காவல் துறையினரால் ஒப்படைக்கப்பட்டது. பணம் கிடைத்த மகிழ்ச்சியில் அப்பெண் காவலர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்தார். அழுது கொண்டிருந்த நேரத்தில் ஆறுதல் அளித்த திருமாவளவனுக்கு அப்பெண் நன்றி தெரிவித்தார்.