சென்னையில் இரண்டு கல்லூரி மாணவர்கள் மோதல்: 8 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை: சென்னையில் இரண்டு கல்லூரி மாணவர்கள் மோதல் விவகாரத்தில் 8 பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று முன்தினம் மாலை தேனாம்பேட்டை டிஎம்எஸ் பகுதியில் மூன்று ஒரு தனியார் கல்லூரி மாணவர்களும் மற்றொரு கல்லூரி மாணவர்கள் என இரு தரப்பினரிடையே மாறி மாறி கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் காயப்பட்ட லயோலா கல்லூரி மாணவர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அதன்பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவர் மேல் சிகிச்சைக்காக சென்றிருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பெயரில் அண்ணா சாலை போலீசார் தனியார் கல்லூரி மாணவர்கள் 8 நபர்கள் மீது ஐந்து பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணவர்கள் தாக்குதல் மற்றும் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட வழக்குக்குள் பதிவு செய்தனர். எதற்காக இந்த இரண்டு கல்லூரி சேர்ந்த மாணவர்களும் மோதி கொண்டார்கள் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.