சென்னையில் டி.டி.வி தினகரன் சதிப்பு குறித்து அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் வெளியாகாத நிலையில் செங்கோட்டையன் மறுப்பு
ஈரோடு: சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் டி.டி.வி தினகரனை செங்கோட்டையன் சந்தித்ததாக வெளியான தகவலுக்கு செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செங்கோட்டையன்
என்னுடைய மனைவி சென்னையில் சிகிச்சை பெற்றுகொண்டிருகிறார். அது தொடர்பாகவே நான் நேற்று சென்னை சென்றிருந்தேன். சென்னையில் எனது சொந்த வேலையை பார்த்துவிட்டு இன்று துரித ரயில் மூலமாக வீடு திரும்பியுள்ளேன். அரசியல் ரீதியாகவோ, மற்ற ரீதியாகவோ நான் யாரையும் சந்திக்கவில்லை.
அதிமுக ஒருங்கிணைப்பு பணி குறித்து கேள்விக்கு:
பல்வேறு நண்பர்கள் என்னிடம் பேசுகின்றனர். ஒருமித்த கருத்து அவர்கள் மனதில் உள்ளது. ஆனால் இது தொடர்பாக யார் என்னிடம் பேசினார்கள் என்பது ‘சஸ்பென்ஸ்’. எனவே எல்லோருடைய உள்ளத்தில் இருப்பதும் அதுதான். எல்லோருடைய மனதிலும் ஒருங்கினைந்து வெற்றி பெற வேண்டும் உள்ளது என்பதையே அது எடுத்து காட்டுகிறது என கூறினார்.