சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்
சென்னை: சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக சென்னை அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இதனால் மழையும் படிப்படியாக குறைந்துவரக்கூடிய சூழலில் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் என்பது விடுக்கப்பட்டுள்ளது. 18 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 3 நாட்களாகவே கனமழை பெய்துவரக்கூடிய சூழலில் இன்றிய தினம் ஆரஞ்சு அலர்ட் என்பது கொடுக்கப்பட்டுள்ளது.